Sunday, September 18, 2005

உங்களுக்கு தெரியுமா?



இந்தப்படத்தில் உள்ளவை என்னவென்று தெரியுமா? குறிப்பாக இது யாழ்மண்ணில் வல்வெட்டித்துறை என்னும் நகரத்தில்தான் பிரபல்யமான ஒன்று!
இதனைப்பற்றிய விளக்கமான பதிவு ஒன்று அடுத்ததாக போடவுள்ளேன்.

Friday, September 09, 2005

'சந்திரமுகி' யில் புரியாத புதிர்

'சூப்பர் ஸாடாரு யாருன்னு கேட்டா சின்ன குழந்தையும் சொல்லும்'சந்திரமுகி கூட அப்படித்தான் என்று நினைக்கிறேன். சந்திரமுகியில் எனக்கு புரியாத புதிர் ஒன்று உள்ளது. உங்களுக்கு புரிந்திருந்தால் எனக்கு புரியவையுங்கள்!

'சந்திரமுகி' படத்தின் கதை ஜோதிகாவை(கங்கா) மைய்யமாக வைத்தே எடுக்கப்பட்டுள்ளது என நான் நினைக்கின்றேன். பொதுவாக சூப்பர் ஸாடார் ரஜனியின் படமென்றால் 'நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்னமாதிரி' போன்ற ஸ்ரைல்கள் இருக்கும் என ரசிகர்கள் எண்ணியிருப்பார்கள். ஆனால் இதில் ஸ்ரைல்கள் ஏதும் இருக்கவில்லை. 'சந்திரமுகி' ஆரம்பத்தில் பேய்ப்படமாக இருக்குமோ என்ற சந்தேகத்தைக் கொடுத்தது. ஆனால் இறுதியில் 'ஒருவர் இன்னொருவராக மாறும்தன்மை' அதாவது 'ஸ்பிலிட் பெர்ஸனாலிட்டி' என்ற மனநோயால்த்தான் கங்கா பாதிக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டது. ஆகமொத்தத்தில் பேய்களுக்கும் ஆவிகளுக்கும் இந்தப்படத்தில் சம்பந்தமில்லை என்றே முடிவுசெய்யலாம்.

அப்படியிருக்க இந்தப்படத்தில் 'ராஜநாகம்' என்று சொல்லக்கூடிய பெரியபாம்பு ஒன்றை இடையிலே தோன்றவைத்து இறுதியில் வெளியேசெல்வது போன்றும் ஒருகாட்சி அமைத்துள்ளார் இயக்குனர். 'இதுதான் எனது புரியாதபுதிர்'. மனநோயால் கங்கா பாதிக்கப்பட்டிருப்பதால்த்தான் இவளவும் நடந்ததாக கூறிய இயக்குனர் இந்தப்படத்துக்கு சம்பந்தமே இல்லாமல் இந்த 'ராஜநாகம்' நுழைத்தது ஏன்?

உங்களுக்கு புரிந்திருந்தால் பின்னுட்டல் இடவும். அதற்காக 'உனக்கேன்டா இந்த ஆராய்ச்சி' என்று பின்னூட்டல் இடாதீர்கள். எனது மனதில் எழுந்த சந்தேகத்தை உங்களிடம் வினாவுகிறேன். 'கதம் கதம்'