Friday, September 09, 2005

'சந்திரமுகி' யில் புரியாத புதிர்

'சூப்பர் ஸாடாரு யாருன்னு கேட்டா சின்ன குழந்தையும் சொல்லும்'சந்திரமுகி கூட அப்படித்தான் என்று நினைக்கிறேன். சந்திரமுகியில் எனக்கு புரியாத புதிர் ஒன்று உள்ளது. உங்களுக்கு புரிந்திருந்தால் எனக்கு புரியவையுங்கள்!

'சந்திரமுகி' படத்தின் கதை ஜோதிகாவை(கங்கா) மைய்யமாக வைத்தே எடுக்கப்பட்டுள்ளது என நான் நினைக்கின்றேன். பொதுவாக சூப்பர் ஸாடார் ரஜனியின் படமென்றால் 'நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்னமாதிரி' போன்ற ஸ்ரைல்கள் இருக்கும் என ரசிகர்கள் எண்ணியிருப்பார்கள். ஆனால் இதில் ஸ்ரைல்கள் ஏதும் இருக்கவில்லை. 'சந்திரமுகி' ஆரம்பத்தில் பேய்ப்படமாக இருக்குமோ என்ற சந்தேகத்தைக் கொடுத்தது. ஆனால் இறுதியில் 'ஒருவர் இன்னொருவராக மாறும்தன்மை' அதாவது 'ஸ்பிலிட் பெர்ஸனாலிட்டி' என்ற மனநோயால்த்தான் கங்கா பாதிக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டது. ஆகமொத்தத்தில் பேய்களுக்கும் ஆவிகளுக்கும் இந்தப்படத்தில் சம்பந்தமில்லை என்றே முடிவுசெய்யலாம்.

அப்படியிருக்க இந்தப்படத்தில் 'ராஜநாகம்' என்று சொல்லக்கூடிய பெரியபாம்பு ஒன்றை இடையிலே தோன்றவைத்து இறுதியில் வெளியேசெல்வது போன்றும் ஒருகாட்சி அமைத்துள்ளார் இயக்குனர். 'இதுதான் எனது புரியாதபுதிர்'. மனநோயால் கங்கா பாதிக்கப்பட்டிருப்பதால்த்தான் இவளவும் நடந்ததாக கூறிய இயக்குனர் இந்தப்படத்துக்கு சம்பந்தமே இல்லாமல் இந்த 'ராஜநாகம்' நுழைத்தது ஏன்?

உங்களுக்கு புரிந்திருந்தால் பின்னுட்டல் இடவும். அதற்காக 'உனக்கேன்டா இந்த ஆராய்ச்சி' என்று பின்னூட்டல் இடாதீர்கள். எனது மனதில் எழுந்த சந்தேகத்தை உங்களிடம் வினாவுகிறேன். 'கதம் கதம்'

7 comments:

ஜோ/Joe said...

ஹலோ! என்ன சந்திரமுகி அதுக்குள்ள ரிலீஸ் ஆயிடுச்சா ?அதுக்குள்ள பாத்துட்டீங்களா?

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

படத்தில் logic எல்லாம் பார்க்க கூடாது. சும்மா பயம் காட்டுவதற்காக அந்த பாம்பை பயன்படுத்தியிருக்கலாம். இல்லை, எதேச்சையாக பாழடைந்த பங்களாவில் பாம்பு இருந்தது என்று நினைத்துக்கொள்ள வேண்டியது தான்

காழியன் said...

I read somewhere, the reason for showing the COBRA in the movies is just for centiment. Yes, in many Rajini's movies you can snake which was successful. Example Annamalai (Kadavule Kadavule), Padayappa, Thambikku entha ooru.

பாலதர்ஷன் said...

hi ஜோ! நான் அண்மையில்தான் எனது தமிழ்காற்று வலைப்பதிவை ஆரம்பித்தேன். சந்திரமுகி வெளியாகி ஒரு வாரத்துக்குள் பார்த்துவிட்டேன். அப்போதே இந்த சந்தேகம் எழுந்தது. இப்பொழுது தான் சந்தர்ப்பம் கிடைத்தது. அவளவுதான்!

பாலதர்ஷன் said...

ஓகே! ரவிசங்கர்.
நன்றி

வசந்தன்(Vasanthan) said...

உந்தப் பாம்பைப் பற்றி ரோசா வசந்தின்ர சந்திரமுகி பற்றின பதிவில விலாவாரியா ஆராய்ச்சி செய்திருக்கினம். போய்ப்பாருங்கோ.

வீ. எம் said...

அது தானே எனக்கும் புரியலை பாலன்..
என் முதல் பதிவே சந்திரமுகி விமர்சனம் தான்.. அதுலயே இதுபத்தி கேள்வி எழுப்பியிருந்தேன்.. இன்னும் விடை கிடைக்கல!